ஜம்மு-காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்ட 6 பாலங்கள் திறப்பு

23 views
1 min read
road

ஜம்மு-காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்ட 6 பாலங்கள் திறப்பு

புது தில்லி: ஜம்மு- காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாடு கோடு உள்பட முக்கிய எல்லைப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்ட 6 பாலங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

எல்லை சாலைகள் வாரியத்தால் இந்த புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், எல்லைப் பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் என்பது வெறும் கட்டமைப்பு பலங்கள் மட்டுமல்ல, ஊரகப் பகுதிகளை முக்கியப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய இணைப்புகளாகும். இந்த பாலங்கள் மூலம் ராணுவப் படைக்கு மிகப் பெரிய பலன்கள் கிடைக்கும் அதே சமயம், சுகாதாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் அனைத்து விதமான சாதகங்களும் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு இணைப்பதன் மூலம் கிடைக்கின்றன என்று தெரிவித்தார்.

கதுவா மாவட்டத்தில் இரண்டு பாலங்களும், அக்னூர் – பல்லன்வாலா சாலையில் நான்கு பாலங்களும் 43 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. 

இந்த பாலங்கள் கட்டுமானப் பணிக்கு உதவி செய்த ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர், தற்போது சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலைகள் கட்டமைக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
 

TAGS
kashmir

Leave a Reply