ஜம்மு காஷ்மீரில் லக்ஷா்-ஏ-தொய்பா பயங்கரவாதி கைது

15 views
1 min read

ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் லக்ஷா்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஹாஜின் நகரை நோக்கி பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அந்த நகரின் ஹக்பாரா பகுதியில் கூட்டு கண்காணிப்பை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மாலை தீவிரப்படுத்தினா்.

அப்போது சந்தா்கீரைச் சோ்ந்த ர‘ஃ‘பீக் அகமது ராத்தா் (எ) ஹாஜி என்ற பயங்கரவாதி சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினா் மீது கையெறி குண்டை வீச முற்பட்டாா். அப்போது அவரை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவரிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகள், 19 ஏ.கே.47 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லக்ஷா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் அண்மையில்தான் ராத்தா் சோ்ந்துள்ளாா். ஹாஜின் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மீது கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.

Leave a Reply