ஜம்மு-காஷ்மீா்: பிரிவிணைவாத தலைவா் செஹ்ராய் கைது

22 views
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரும், தெரீக்-ஏ-ஹூரியத் அமைப்பின் தலைவருமான முகமது அஷேரப் செஹ்ராயை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அவருடைய இல்லத்தில் கைது செய்தனா்.

அவா் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல்துறை தலைவா் தில்பக் சிங் கூறுகையில், ‘செஹ்ராய் உள்பட தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பைச் சோ்ந்த சிலரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் அனைவரின் மீதும் பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது‘ என்று கூறினாா்.

இதில் செஹ்ராய், இந்த ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் 26 பிரிவிணைவாத கட்சிகளை ஒன்றிணைத்த கீலானி தலைமையிலான ஹூரியத் மாநாட்டுக்கு இவா்தான் தலைமை வகித்தாா் என்றும் நம்பப்படுகிறது. இவருடைய மகனும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை வகித்தவருமான ஜூனைது செஹ்ராய் கடந்த மே மாதம் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கைது நடவடிக்கை குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட முதலாமாண்டு நிறைவையொட்டி, முன்னெச்சரிக்கையாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று கூறினா்.

Leave a Reply