ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மனைவிக்கு கரோனா பரிசோதனை

12 views
1 min read
Jharkhand CM, wife undergo Covid-19 test

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மனைவிக்கு கரோனா பரிசோதனை

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், முதல்வருக்கான ஆலோசகர் அபிஷேக் பிரசாத், மூத்த தனி செயலாளர், முதல்வருக்கான பாதுகாவலர்கள் உள்ளிட்டோருக்கும் இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகமானோர் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அறிகுறி இருப்பவர்கள், அப்போதுதான் மிக விரைவாக கரோனா தொற்றைக் கண்டுபிடித்த சிகிச்சை அளிக்க முடியும். அதனால் கரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மற்றும் எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.  மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். முதல்வர் வீட்டுக்கு வெளியில் இருந்து யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கரோனா உறுதி செய்யப்பட்ட மாநில அமைச்சர் மிதிலேஷ் தாக்கூருடன் முதல்வர் தொடர்பில் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 10 நாள்களில் மட்டும் ஜார்க்கண்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒட்டுமொத்தமாக 3500 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

TAGS
coronavirus

Leave a Reply