ஜூன் மாதத்தில் என்பிசிசி நிறுவனத்துக்கு ரூ.432 கோடி மதிப்பிலான திட்டங்கள்

11 views
1 min read

பொதுத்துறை கட்டுமான நிறுவனமான என்பிசிசி இந்தியாவுக்கு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.431.63 கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.

பெல் நிறுவனத்தின் ரூ.284.63 கோடி மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்றித் தருவதற்கு என்பிசிசி இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள யதாத்ரி பகுதியில் கட்டப்பட்டு வரும் அனல்மின் நிலையத்துக்கான குளிரூட்டும் கோபுரங்களை என்பிசிசி நிறுவனம் அமைக்கவுள்ளது.

மேலும், உத்தர பிரதேசத்தின் வாராணசியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கான தங்குமிடங்களை என்பிசிசி நிறுவனம் ரூ.147 கோடியில் கட்டிக் கொடுக்கவுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் அலுவலகங்களும் நிறுவனங்களும் மூடப்பட்டன. இத்தகைய சூழலில், என்பிசிசி நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் என்பிசிசி இந்தியா நிறுவனப் பங்குகளின் விலை புதன்கிழமை 1.65 சதவீதம் ஏற்றம் கண்டு தலா ரூ.27.80-க்கு விற்பனையாகின.

Leave a Reply