ஜூலை 14-ம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

17 views
1 min read
Tamilnadu_Cabinet_Meeting

ஜூலை 14-ம் தேதி மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஜூலை 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா தாடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில், சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு சில நாள்களாக கரோனா பாதிப்பு இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. அதே சமயம், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மேலும் அறிவிக்க வேண்டிய தளர்வுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

TAGS
Tamilnadu news

Leave a Reply