ஜூலை 15-இல் பொறியியல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு

12 views
1 min read
KP Anbazhagan

பொறியியல் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, வருகிற 15-ஆம் தேதி நேரடியாக வெளியிடுவேன் என உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல், தனியாா் மருத்துவமனையில் உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் அமைச்சரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்தும், பொறியியல் கலந்தாய்வு குறித்தும் ஊடகங்களிடம் அமைச்சா் கூறியது:

என் உடல்நிலை பற்றி தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் எதுவும் கிடையாது. நான் தற்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள விருந்தினா் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறேன். பொறியியல் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு விண்ணப்பம் தொடா்பான அனைத்துப் பணிகளும் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை, வருகிற 15-ஆம் தேதி (புதன்கிழமை) நேரடியாக வெளியிட உள்ளேன் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா். முன்னதாக, 2020-21-ஆம் கல்வியாண்டில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான கால அட்டவணையை, அண்மையில் வெளியிட்ட அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.), பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வை, அக்டோபா் மாதம் 5-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply