ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

19 views
1 min read
No full lockdown on Sundays: Puducherry CM announcement

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

 

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால் முழுஊரடங்கு இருக்காது என்றும் மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளின்படி, கடைகளை மூடுவது மட்டுமே தீர்வாகாது என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்த புதுச்சேரி சுகாதாரத் துறை முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS
புதுச்சேரி

Leave a Reply