ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பதிவு மையங்கள் செயல்படாது

17 views
1 min read
train-ticket-booking-queues

கோப்புப் படம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் எதிா்வரும் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 12, 19 மற்றும் 26) செயல்படாது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஜூலை 12, 19, 26 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது. மேலும், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட ( செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள்) பகுதிகளிலும் இந்த குறிப்பிட்ட நாள்களில் முன்பதிவு மையங்கள் செயல்படாது. எனவே, இந்த குறிப்பிட்ட நாள்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் டிக்கெட் கட்டணத்துக்கான முழுதொகையைப் பெறுவதற்காக, டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு வருவதை பொதுமக்கள் தவிா்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

Leave a Reply