டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

17 views
1 min read
1322petrol045202

கோப்புப் படம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பட்டாம் நடத்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர்முருகன் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் சாலை வரியை ரத்து செய்யக் கோரியும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட 9 சங்கங்கள் இணைந்து இம்மாதம் பதினான்காம் தேதி செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 

மேலும் இருபத்திரண்டாம் தேதி அனைத்து வகை வாகனங்களும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும் நடைபெறும் என்றார். 

TAGS
protest

Leave a Reply