டெஸ்ட் தலைமைப் பதவி இப்போது வேண்டாம்: டி காக்

21 views
1 min read
de_kock_sa

 

தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் ஆக தற்போது விருப்பம் இல்லை என டி காக் தெரிவித்துள்ளார்.

ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ள டி காக், டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்குவது குறித்துக் கூறியதாவது:

மார்க் பெளச்சரிடம் இதுபற்றி பேசியுள்ளேன். இப்போதைக்கு டெஸ்ட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டால் என்னால் ஒரே சமயத்தில் பல பொறுப்புகளைச் சுமக்க முடியாது. இதை நான் உணர்கிறேன். என்மீது அழுத்தங்கள் வந்து சேர்வதை விரும்பவில்லை. இப்போது என் பொறுப்பில் அது வேண்டாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசை வீரராக முன்னேறி விளையாட விரும்புவதால் வேறு அழுத்தங்கள் எனக்கு வேண்டாம் என்றார். 

ஊரடங்கு காலத்தில் டி காக் என்ன செய்கிறார்?

எனக்கு இந்த ஓய்வு தேவைப்பட்டது. மற்ற வீரர்கள் பயிற்சியில் மூழ்கியிருப்பார்கள் எனத் தெரியும். குடும்பம், நண்பர்களுடன் நேரம் செலவிட இந்த ஓய்வை எடுத்துக்கொண்டேன். சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் தொடங்கும்போது நாங்களும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபடுவோம். இச்சமயத்தில் பயிற்சியை விடவும் ஓய்வு தான் முக்கியம். என்னுடைய உடற்தகுதி சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். 

TAGS
de Kock

Leave a Reply