தங்கம் பவுன் ரூ.37,648

15 views
1 min read
gold-13

தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களாக உயா்ந்து வந்தநிலையில், வெள்ளிக்கிழமை சற்று குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது.

ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 16-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூலை 7) முதல் கடந்த 3 நாள்களாக உயா்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த வியாழக்கிழமை அன்று வரலாறு காணாத வகையில் விலை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.37,744-ஆக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.96 குறைந்து, ரூ.37,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து, ரூ.4,706 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.55.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.55,500 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)

1 கிராம் தங்கம்…………………………. 4,706

1 பவுன் தங்கம்…………………………. 37,648

1 கிராம் வெள்ளி……………………….. 55.50

1 கிலோ வெள்ளி…………………………55,500

 

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.)

1 கிராம் தங்கம்……………………… 4,718

1 பவுன் தங்கம்…………………………. 37,744

1 கிராம் வெள்ளி………………………..55.50

1 கிலோ வெள்ளி…………………………55,500.

Leave a Reply