தஞ்சாவூரில் கரோனா பாதித்த பெண் மருத்துவர் பலி

16 views
1 min read

chengalpattu corona test

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சேர்ந்தவர் 72 வயதுடைய பெண் மகப்பேறு மருத்துவர். அரசு மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பின்னர் தனது வீட்டின் அருகே மருத்துவகம் அமைத்து மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்தார்.

இந்நிலையில்,  உடல் நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஜூன் 29-ம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவருக்கு கரோனா தொற்று இருப்பது ஜூன் 30-ம் தேதி தெரிய வந்தது.

இதையடுத்து, இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலை 1-ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தார். 

இதனிடையே, மருத்துவரின் மருத்துவகத்தில் பணியாற்றிய 4 பெண்களுக்கும், 4 உறவினர்களுக்கும் கரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply