தஞ்சாவூர் அருகே இரண்டாவது திருமணம் செய்தவர் அரிவாளால் வெட்டிக் கொலை

19 views
1 min read
murder

மர்மமான முறையில் இளைஞர் கொலை

 

தஞ்சாவூர் அருகே இரண்டாவது திருமணம் செய்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட ஓட்டுநர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் கோவிந்தராஜ் (40). தனியார் பேருந்து ஓட்டுநர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வாளமர்கோட்டையைச் சேர்ந்த பிரியங்காவை (35)  திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கோவிந்தராஜ் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மங்கையர்க்கரசியை வெள்ளிக்கிழமை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

இதனால் ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து பிரியங்காவின் தாய் மாமனான நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த  குணசேகரன்,  மங்கையர்க்கரசியின் தங்கை கணவர் சங்கரை தேடி வருகின்றனர்.

TAGS
death

Leave a Reply