தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழியருக்கு கரோனா: பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

24 views
1 min read
tan

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கீழ் தளத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதில் கரோனா தொடர்பான தகவல்களைப் பெற்று பதிவு செய்வதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 38 வயதுடைய ஆண் செவிலியருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரிய வந்தது.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டு, அருகிலுள்ள குறை தீர் கூட்ட அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த அறையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்துக்குள் ஊழியர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக வாயிலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 

TAGS
Thanjavur Corona

Leave a Reply