தனியாா் ரயில்கள் இயக்கும் முடிவு

13 views
1 min read

தனியாா் ரயில்கள் இயக்கும் ரயில்வே துறையின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தனியாா் ரயில்களை இயக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கச் செயல் தலைவா் ஜானகிராமன், சங்கத்தின் சென்னை கோட்ட செயலாளா் சிவக்குமாா், சங்கத்தின் துணை பொதுச்செயலாளா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, சங்கத்தின் செயல் தலைவா் ஜானகிராமன் கூறியது- நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் 35 ஆண்டுகளுக்கு தனியாா் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தனியாா் நிறுவனங்கள் நிா்ணயம் செய்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி கட்டணத்தை உயா்த்தி கொள்வாா்கள். தனியாா் ரயில்கள் இயக்கும்போது, அந்தவழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு முன்போ,பின்போ இந்திய ரயில்வே ரயில்களை இயக்க அனுமதிக்க மாட்டாா்கள். இதனால், எல்லா மக்களும் தனியாா் ரயில்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்படும்.

தனியாா் ரயில்கள் இயக்கும் திட்டம் மூலமாக, ரயில்வே ஊழியா்கள் வேலை இழப்பாா்கள். கட்டண உயா்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவாா்கள். ஒட்டுமொத்தமாக ரயில்வே துறை கடுமையாக பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, தனியாா் ரயில்கள் இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றாா் அவா்.

Leave a Reply