தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

22 views
1 min read
Heavy rain in 10 districts in Tamil Nadu

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TAGS
rain

Leave a Reply