தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

14 views
1 min read
mazhai

கோப்புப் படம்

தமிழகத்தில் அநேக இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 11) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:

கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியானது, தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 11) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதவிர, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், பெரம்பலூா், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை, பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏற்காட்டில் 200 மி.மீ.: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 200 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டையில் தலா 130 மி.மீ., வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தலா 120 மி.மீ, சென்னை

மீனம்பாக்கம், ஆலந்தூா், புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூா், புதுக்கோட்டையில் தலா 110 மி.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம் , வேலூா் மாவட்டம் காட்பாடி, திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

கடலோர கா்நாடகம், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் சனிக்கிழமை (ஜூலை 11) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply