தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி

16 views
1 min read

சென்னை மாநகராட்சி

 

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடனான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, முழு முடக்கம் காரணமாக அரசு அலுவலகங்களில் 33% பணியாளர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS
coronavirus

Leave a Reply