தமிழகத்தில் ஒரே நாளில் 4,343 பேருக்கு கரோனா

22 views
1 min read

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 98,392-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 4 நாள்களில் மட்டும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், பலருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் அடுத்த மூன்று வாரங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். தலைநகா் சென்னையைப் பொருத்தவரை தற்போது 62,598 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. அதேபோன்று மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் நோய்ப் பரவல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 12.35 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 98,392 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை இல்லாத வகையில் வியாழக்கிழமை மட்டும் 4,343 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 2,027 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 273 பேருக்கும், செங்கல்பட்டில் 171 பேருக்கும், திருவண்ணாமலையில் 167 பேருக்கும், திருவள்ளூரில் 164 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

55 சதவீதம் போ் வீடு திரும்பினா்: கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 55 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 56,021 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். முன்னெப்போதும் இல்லாத வகையில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,095 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,321 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 57 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 12 பேருக்கு உடலில் வேறு எந்த நோய்களும் இல்லை என்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது. அவா்களில் 40 வயதுக்குட்பட்ட சிலரும் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,321-ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 242 போ் கரோனாவுக்கு இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply