தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது

25 views
1 min read

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 64 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,082 ஆக உயர்ந்துள்ளது.  இன்று மட்டும் கரோனா பாதித்து சிகிச்சையின் பயனாக 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மார்ச் 7 முதல் ஜூன் 17-ம் தேதி வரையிலான 103 நாள்களில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50,193 ஆக இருந்தது. அதே சமயம், தமிழகத்தில் கடந்த 16 நாள்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் 50 ஆயிரம் கரோனா பாதிப்பு 103 நாள்களிலும் அடுத்த 50 ஆயிரம் பாதிப்பு வெறும் 16 நாள்களிலும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், நாட்டிலேயே கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 

தமிழகத்தில் சென்னையில் கரேனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போதுபிற மாவட்டங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
 

TAGS
coronavirus tamilnadu corona update

Leave a Reply