தமிழகத்தில் காவல் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதித்து அரசாணை வெளியீடு

20 views
1 min read
Government issues ban on police friends group in Tamil Nadu

தமிழகத்தில் காவல் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் காவல் நண்பர்கள் குழு செயல்பட தடை விதித்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை டிஜிபி மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையடுத்து திருச்சி,  கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் காவல் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. காவல்துறை பணிகளுக்கு காவல் நண்பர்கள் குழுவைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழியாக ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் காவல் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

TAGS
tamilnadu news

Leave a Reply