தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 செ.மீ. மழை

18 views
1 min read
Mumbai-Rains-9

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை: தமிழகத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 20 செ.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக கீரனூர் (புதுக்கோட்டை), அரக்கோணம், டேனிஷ்பேட்டை(சேலம்) ஆகிய பகுதிகளில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், செய்யூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் 12 செ.மீ. மழையும், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், புதுக்கோட்டை, பெருங்கலூர் மாவட்டங்களில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

TAGS
Rain

Leave a Reply