தமிழகத்தில் பிறந்து 25 நாள்களே ஆன குழந்தை கரோனாவுக்குப் பலி

17 views
1 min read
25 days old  child died for COVID 19 in Tamilnadu

கோப்புப்படம்

lதமிழகத்தில் பிறந்து 25 நாள்களே ஆன குழந்தை ஒன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, அடிவயிற்றில் நோய்தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை மூன்று முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த 27ம் தேதி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 7 ஆம் தேதி குழந்தை உயிரிழந்தது. கரோனா நோய்த்தொற்று பாதிப்பினாலும், நெஞ்சுவலி காரணமாகவும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில்  மொத்த பாதிப்பு 1,26,581ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 3,994 பேர் குணமடைந்தனர்
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,015 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

TAGS
coronavirus

Leave a Reply