தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 3,994 பேர் குணமடைந்தனர்

15 views
1 min read
TN reports 4,231 cases today

கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,086. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 145 பேர்.

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,26,581ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,216 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 73,728 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 65 பேர்(அரசு மருத்துவமனை -43, தனியார் மருத்துவமனை -22)  பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 78,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 46,652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 14,91,783 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 53, தனியார் ஆய்வகங்கள் 47 என மொத்தம் 100 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,015 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

TAGS
coronavirus

Leave a Reply