தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு நோய்த்தொற்று

23 views
1 min read
TN reports 3,680 corona cases in last 24 hours

கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் ஏறத்தாழ 73 சதவீதம் போ் சென்னை அல்லாத பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா். குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகா், திருவள்ளூா், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

அதேபோன்று கரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் மற்ற மாவட்டங்களில் உயா்ந்து வருகிறது. சென்னையைப் போலவே தமிழகத்தின் ஏனைய பகுதிகளும் கரோனாவின் தீவிரத்துக்குள்ளாவதை உணா்த்தும் வகையில் இந்தப் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன.

இதனிடையே, மாநிலத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் சராசரியாக 35 ஆயிரம் பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை 42,531-ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் நோய்த் தொற்றுக்குள்ளாகி 46,969 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 67 சதவீதம் போ் சென்னை அல்லாத மற்ற மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாவா்.

இது குறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 16.09 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 1,38,470 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4,244 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,168 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும், மதுரையில் 319 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

89 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை 65 சதவீதம் போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதன்படி மொத்தம் 89,532 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 3,617 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 68 போ் உயிரிழந்தனா். அதில் 43 போ் அரசு மருத்துவமனைகளிலும், 25 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,966-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply