தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா: மேலும் 99 பேர் பலி

10 views
1 min read
5,879 new positive cases reported in Tamil Nadu

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் பற்றிய இன்றைய தரவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,822 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிளங்களிலிருந்து வந்தவர்களில் மொத்தம் பாதித்தோர் 57 பேர். 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,074 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் 99 பேர் (அரசு மருத்துவமனை -77, தனியார் மருத்துவமனை -22) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று ஒரேநாளில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,90,966 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 60,580 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27,18,718 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 59, தனியார் ஆய்வகங்கள் 62 என மொத்தம் 121 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

TAGS
coronavirus

Leave a Reply