தமிழகத்தில் முதன்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

25 views
1 min read

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிய உச்சமாக 4,343 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் 2,027 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் 57 பேர் பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply