தமிழகத்தில் மேலும் 3,680 பேருக்கு தொற்று; பாதிப்பு 1.30 லட்சத்தைத் தாண்டியது!

21 views
1 min read
TN reports 3,680 corona cases in last 24 hours

கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 

தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றிய பாதிப்பில், தமிழகத்தில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,636. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 44 பேர். 

சென்னையில் இன்று 1,205 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 74,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இன்று 64 பேர் (அரசு மருத்துவமனை -47, தனியார் மருத்துவமனை -17) பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம், இன்று மட்டும் 4,163 பேர் உள்பட இதுவரை மொத்தம் 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 46,105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 37,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 15,29,092 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 53, தனியார் ஆய்வகங்கள் 48 என மொத்தம் 101 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்
சென்னையில் 1,205 பேர்; பிறமாவட்டங்களில் 2,475 பேர் பாதிப்பு: மாவட்டவாரியாக நிலவரம்

TAGS
coronavirus

Leave a Reply