தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்

20 views
1 min read
51 IPS officers transferred in tamilnadu

தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சென்னை: தமிழகத்தில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவினை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

அதன்படி திருச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல இன்னும் பல அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply