தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்க வாய்ப்பு

14 views
1 min read
vanilai

காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 8) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 8) மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, நகரில் பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 60 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் கோலியனூா், விழுப்புரம், கடலூா் மாவட்டம் லால்பேட்டையில் தலா 40 மி.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாா், சின்கோனா, சோலையாறில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 11-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இந்தப்பகுதிகளுக்கு ஜூலை 10-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply