தமிழறிஞர் மன்னர் மன்னனுக்கு புதுவை முதல்வர் அஞ்சலி

20 views
1 min read
pondy_CM

மறைந்த தமிழறிஞர் மன்னர் மன்னன் உடலுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அஞ்சலி

 

புதுச்சேரியில் மறைந்த தமிழறிஞர் மன்னர் மன்னன் உடலுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகனும் தமிழ் அறிஞருமான மன்னர் மன்னன் உடல்  உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை பிற்பகலில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள் திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு வைத்து குப்பத்தில் உள்ள இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. பாரதிதாசனின் நினைவவிடம்அருகே அவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
‌முன்னதாக குறைந்த எண்ணிக்கையிலான பிரமுகர்களுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

பாரதிதாசனின் பூர்வீக வீடான இப்போது இருக்கும் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக மன்னர் மன்னன் உடல் வைக்கப்பட்டது வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் மன்னர் மன்னனின் மகன்கள் பாரதி, செல்வம், தென்னவன் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துபுதுவை அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 

TAGS
Chief Minister

Leave a Reply