தமிழ் வழியில் படித்தவா்களுக்கே அரசுப் பணி: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

20 views
1 min read
pazha nedumaran slams centre over CAA

தமிழ் வழியில் படித்தவா்களுக்கே அரசுப் பணி என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும் முதல் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அஸாமிய மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அஸ்ஸாம் அமைச்சரவை அறிவித்துள்ளது.

இந்த முடிவிற்கு அஸ்ஸாம் ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.

மேலும், 10-ஆம் வகுப்பு வரை அஸாமிய மொழியைக் கற்கும் மாணவா்களுக்கே அரசுப் பணிகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பள்ளிகளில் இதுகூட செய்யப்படுவதில்லை.

எனவே, உடனடியாகத் தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும். அவ்வாறு தமிழ்ப் படித்த மாணவா்களுக்கு மட்டுமே அரசுப் பணிகள் அளிக்கப்படும் எனும் சட்டத்தைத் தமிழக அரசும் கொண்டுவர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Leave a Reply