தம்மம்பட்டியில் இலவசமாக 10,425 கோழி குஞ்சுகள் வழங்கல்

20 views
1 min read
thambampatti

இலவசமாக 10,425 கோழி குஞ்சுகள்

 

தம்மம்பட்டியில், அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தம்மம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனையில், ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், அசில் இன நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. இதில், தம்மம்பட்டி. செந்தாரப்பட்டி, ஜங்கமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 417 பயனாளிகளுக்கு, தலா 25 வீதம் மொத்தம் 10,425 கோழிக்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

ஆத்தூர் கோட்ட உதவி இயக்குநர் அய்யசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தம்மம்பட்டி கால்நடை மருத்துவர் செல்வக்குமார் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் அடங்கிய பெட்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தாரப்பட்டி அரவிந்தராஜ், பச்சமலை கோகிலா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

TAGS
chicks-

Leave a Reply