தலைநகரில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு

16 views
1 min read
PM appreciates efforts of Centre, Delhi govt in containing COVID situation in national capital

தலைநகரில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு

புது தில்லி: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலவரம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடைமுறைகளை ஒட்டமொத்த என்சிஆர் பகுதியிலும் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் சுகாதாரம், சமூக ஒழுக்கம் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

TAGS
coronavirus modi

Leave a Reply