தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

11 views
1 min read
tngovt1

தலைமைச் செயலகத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக, அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும் என தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டிருந்தாா்.

அவரது உத்தரவுப்படி, கடந்த ஜூன் மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோன்று, ஜூலை மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்றும் தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பிரதான கட்டடத்தின் மூன்று தளங்கள், நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10 தளங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னா் அவை பூட்டப்பட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்குப் பிறகு, திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் அரசுப் பணிகளுக்காக அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன.

Leave a Reply