தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்த மகனைக் காப்பாற்றிய தாய் சாவு

17 views
1 min read
Mother died who is try to save her son

தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்த மகனைக் காப்பாற்றிய தாய் சாவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்த மகனைக் காப்பாற்றிய தாய் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தாராபுரத்தை அடுத்துள்ள சி.குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (45), இவரது மனைவி சிவகாமி (35), இந்தத் தம்பதிக்கு ரோகித் பிரசாந்த் (11) என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில், ரோகித் பிரசாந்த் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்சார வயரைக் கையில் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அலறியுள்ளார். மகனின் அலறலைக் கேட்ட சிவகாமி அங்கு வந்து மகனைக் காப்பாற்ற முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக  மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதில் சிறிய காயங்களுடன் ரோகித் பிரசாந்த் உயிர் தப்பினார். இதுகுறித்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் சிவகாமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

TAGS
death

Leave a Reply