திண்டுக்கல்லில் 52 பேருக்கு கரோனா உறுதி

7 views
1 min read
coronavirus

 

திண்டுக்கல்,: திண்டுக்கல் மாவட்டத்தில் 52 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,750- க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் சுமாா் 680 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த வங்கி அலுவலா் மற்றும் போலீஸ்காரா் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மூதாட்டி பலி: இதனிடையே பழனியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, கரோனா தொற்று பாதிப்புக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் காரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

TAGS
கரோனா

Leave a Reply