திண்டுக்கல் கரோனா சிறப்பு மையத்தில் குணமடைந்த 8 பேர் விடுவிப்பு

23 views
1 min read
8 people discharged at Dindigul Corona Special Center

திண்டுக்கல் கரோனா சிறப்பு மையத்தில் குணமடைந்த 8 பேர் விடுவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 836 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மொத்தமாக 411 பேர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 27ஆம் தேதி முதல் முறையாக செயல்படத் தொடங்கியது. அந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் திங்கள்கிழமை வரை 113 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த 8 பேர் மருத்துவக் கண்காணிப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர். வீடுகளுக்கு புறப்பட்ட 8 பேரிடமும், நலப்பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர்(காசநோய்) ராமசந்திரன் ஆகியோர் நலம் விசாரித்து ஆலோசனை வழங்கினர்.

வீட்டில் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் அறிவுறுத்தினர். கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலிருந்து முதல் முறையாக 8 பேர் குணமடைந்து திரும்பியது, அங்கு தங்கியுள்ள பிற நோயாளிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

TAGS
திண்டுக்கல்

Leave a Reply