திருச்சியில் இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

15 views
1 min read
trichy_protest

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி உறையூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் ஏ.கே. திராவிடமணி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் க. சுரேஷ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறத்தி பேசினர். 

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு தரமான உணவு, குடிநீர், படுக்கை, மருந்து, பராமரிப்பு உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு வீடு, வீடாக கரோனா பரிசதோனை மேற்கொள்ள வேண்டும். 

மாநகரப் பகுதியில் உள்ள 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் குழுவினரைப் பயன்படுத்தி வார்டு, வார்டுகளாக பிரித்து மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் உறையூர் பகுதி பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

TAGS
Trichy

Leave a Reply