திருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை

15 views
1 min read
corona patient found dead in toilet

கோப்புப்படம்

திருச்சி: திருச்சி அருகே காட்டுப் பகுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி இன்று (திங்கள்கிழமை) எரித்துக் கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய சோமரசம்பேட்டை போலீஸார், வழக்கு பதிவு செய்து, பாலியல் தொந்தரவு செய்து கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நெய்தலூர் காலனியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது 2ஆவது மகள் கங்காதேவி(14). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று (திங்கள்கிழமை) மதியம் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர் இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்கு செல்வதாக வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாய் மகேஸ்வரி காட்டுப்பகுதியில் தேடி வந்தனர்.  அப்போது அங்குள்ள அடர்ந்த கருவேலமுள் பகுதியில் பாதி உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மகேஸ்வரி கூச்சலிடும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் நிகழ்விடத்தில் திரண்டனர். இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸார் சிறுமி உடலை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா ஆகியோர்  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TAGS
திருச்சி மாணவி உடலை

Leave a Reply