திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

15 views
1 min read
trichy_airport

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சார்ஜாவில் இருந்து புதன்கிழமை, திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 167 பயணிகள் திருச்சி வந்தனர்.

அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், திருவாரூரைச் சேர்ந்த தியாகராஜன் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் தங்களது உடமைகளுக்குள், தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதனை எடுத்து அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 58 லட்சம் ஆகும்.
 

TAGS
gold seized

Leave a Reply