திருப்பதியில் 70 பேருக்கு கரோனா

14 views
1 min read

திருப்பதியில் புதன்கிழமை 70 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையா் கிரிஷா தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருப்பதி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை நடந்த கூட்டத்தில் அவா் கூறியது:

திருப்பதி நகரில் 50 மண்டலப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் 40 பிரிவுகளில் கரோனா பாதிப்புள்ளது. இந்த 40 பிரிவுகளும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை 70 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவா்களையும் சோ்த்து நகரில் இதுவரை 350 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 110 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 50 போ் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்களாவா்.

எனவே, திருப்பதியில் வசிப்போா் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அனைவரும் சுயக் கட்டுப்பாட்டுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கரோனா பாதிப்பில் இருந்து விடுபடலாம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி நகராட்சி தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

 

Leave a Reply