திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காவலர்கள் 30 பேருக்கு கரோனா பாதிப்பு

17 views
1 min read
Corona affect including Archakar at Tirupati Ezumalayan temple

திருப்பதி ஏழுமலையான் கோயில்

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 17 பேருக்கு ஏற்கனவே கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது காவலர்கள் 30 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 30 பேர் உட்பட 44 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருமலை ஏழுமலையான் தரிசனம் கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தரிசனம் தொடங்கப்பட்டு 25 நாட்கள் முடிந்துள்ளது. திருமலைக்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை

இந்நிலையில் திருமலையில் பணிபுரியும் மேளவாத்தியக்காரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அர்ச்சகர்கள் என 17 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியது. சோதிக்கப்பட்ட பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்கு பக்தர்களிடமிருந்து தொற்று பரவும் வாய்ப்பில்லை. அவர்கள் வசிக்கும் இடத்திலிருக்கும் தொடர்பால் தொற்று பரவியிருக்கிறது. அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை தினசரி 12 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான தரிசித்து வருகிறார்கள். தற்போது திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகர், பணியாற்றும் ஊழியர்கள், காவலர்கள் பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், பக்தர்களின் எண்ணிக்கையை தற்போதும் உயர்த்தும் எண்ணம் தேவஸ்தானத்திற்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

திருமலையில் பணிபுரியும் ஊழியர்களின் சுழற்சி முறையை ஒரு வாரத்திலிருந்து 2 வாரங்களாக தேவஸ்தானம் உயர்த்தியது. ஊழியர்கள் 2 வாரம் திருமலையில் தங்கியிருந்து பணிபுரிவர். மேலும் திருமலை தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.

இந்தப் பரிசோதனையில்தான் காவலர்கள் உள்பட 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

TAGS
tirupati

Leave a Reply