திருப்பூரில் ஓட்டுநர் வெட்டிக் கொலை: காவல் துறையினர் விசாரணை

19 views
1 min read
murder

திருப்பூரில் டெம்போ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர்விசாரணைநடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் அருகே சுமார் 30 வயது மதிக்கத்த இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன்பிணமாகக் கிடப்பாத மத்திய காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். 

இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் மரத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான பேச்சிமுத்து(32),என்பதும், கடந்த 25 நாள்களுக்கு முன்பாக குடும்பத்துடன் திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலை தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

TAGS
tirupur murder

Leave a Reply