திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

20 views
1 min read
tripur

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கரட்டாங்காடு, சிடிசி பேருந்து நிறுத்தம், புதூர் பிரிவு, வெள்ளியங்காடு, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய 5 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கூறுகையில், கரோனா நிவாரணமாக ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ரமேஷ், நகரத் தலைவர் ஷகிலா, பெரிச்சிபாளையம் கிளை பொருளாளர் வெங்காசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TAGS
ஆர்ப்பாட்டம்

Leave a Reply