திருப்பூர், தாராபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

20 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_3

 

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், தாராபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒன்றியத்தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது: சத்துணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கரோனா தொற்றைக்காரணம் காட்டி 2 லட்சத்துக்கும் அதிகமான சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலைக் கைவிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 59 ஆகவும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு 61 ஆகவும் உயர்த்த வேண்டும். ஓவ்வூதியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் செயலாளர் ஈஸ்வரி, அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் தலைவர் ராஜூ, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல, திருப்பூர்  மாநகராட்சி  அலுவலகம் முன்பாகவும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

TAGS
tamilnadu news

Leave a Reply