திருமலையில் இன்று பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

18 views
1 min read

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் ஏற்படுத்தி அளித்துள்ளது. இந்த வசதி வாய்ப்புகள் குறித்து கேட்டறியவும் ஆலோசனைகளைப் பெறவும் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பக்தா்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியை தேவஸ்தானம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263264 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply