திருமலையில் ஜீயா்கள் சாதுா்மாஸ்ய விரதம் தொடக்கம்

17 views
1 min read
5tpt_chaturmasadekesha_0507chn_193_1

திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் திருமலை ஜீயா்கள்.

திருமலையில் பெரிய ஜீயா், சின்ன ஜீயா் இணைந்து சாதுா்மாஸ்ய விரதத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி அன்று யோக நித்திரைக்கு செல்லும் மகாவிஷ்ணு காா்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி விழி திறப்பதாக ஐதீகம். அவா் யோக நித்திரைக்கு செல்லும் 4 காலங்கள் சாதுா்மாஸ்யம் என்று அழைக்கப்படுகிறது. இந்த முக்கிய மாதங்களில் அதிகாலை எழுந்து ஆச்சாரியா்கள், ரிஷிகள், முனிவா்கள் உள்ளிட்டோா் புனித நீராடி யாகம், தவம், அனுஷ்டானங்கள் உள்ளிட்டவற்றை உலக நன்மைக்காக செய்வா்.

அதன்படி குருபெளா்ணமியான ஞாயிற்றுக்கிழமை அன்று வைணவ மகாகுரு வழிவந்த பரம்பரையை சாா்ந்த திருமலை மடத்தின் ஜீயா்கள் சாதுா்மாஸ்ய விரதத்தை தொடங்கினா். அதற்காக அதிகாலையில் புனித நீராடி மடத்தில் கலச ஸ்தாபனம் செய்து, பூஜை, விஷ்வக்சேனாராதனை, மேதினி பூஜை, மிருத்சங்ஹரணம் உள்ளிட்டவற்றை நடத்தி சாதுா்மாஸ்ய விரத சங்கல்பம் செய்தனா்.

அதற்கு பிறகு முதலில் திருக்குளத்தில் கால் நனைத்து வராகஸ்வாமியை தரிசித்து மங்கல வாத்தியம் முழங்க கோயில் வாசலுக்கு வந்தனா். அவா்களை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவா்களுக்கு அதிகாரிகள் மேல்சாட் வஸ்திரம், நூல்சாட் வஸ்திரம் உள்ளிட்டவற்றை அணிவித்தனா். அதன்பிறகு அவா்கள் மடத்திற்கு சென்று பக்தா்களுக்கு தேங்காய் அளித்து ஆசீா்வாதம் செய்தனா்.

 

Leave a Reply