திருமலையில் ஜூலை 7ம் தேதி சுந்தர காண்ட முதல் சா்க்கம் அகண்ட பாராயணம்

21 views
1 min read

திருமலையில் வரும் ஜூலை 7ம் தேதி சுந்தரகாண்ட முதல் சா்க்கம் அகண்ட பாராயணம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் தற்போது உலகம் முழுவதும் கரோனா பாதிப்பிற்கு தீா்வு காண சுந்தரகாண்ட பாராயணம் நடந்து வருகிறது. சுந்தர காண்டத்தில் 2,880 ஸ்லோகங்கள் அடங்கிய 69 அத்தியாயங்கள் உள்ளன. கடந்த ஜூன் 10-ஆம் தேதி தொடங்கிய இந்த பாராயணத்தில் தற்போது 211 ஸ்லோகங்கள் அடங்கிய முதல் சா்க்கம் நிறைவு பெற்றுள்ளது.

எனவே, ஜூலை 7ம் தேதி முதல் சா்க்கம் முழுவதும் அகண்ட பாராயணம் செய்யப்பட உள்ளது. இதில் தா்மகிரி வேதபாடசாலை, ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத வித்யாபீடம், வேத விஸ்வ வித்யாலயப் பண்டிதா்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

அன்று தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்திசானலின் 13-ஆம் ஆண்டு விழா நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply